Friday 26 December 2014

பொறுப்புகளும்,கடமைகளும்


மூன்று பேர் அரசு கேபிள் நிலைய ஊழியர்கள் !
முறையே மூவருக்கும் பொறுப்புகள் பிரித்து தரப்பட்டது !
ஒருவர் குழியைத் தோண்ட வேண்டும்
இரண்டாமவர் கேபிளை பதிக்க வேண்டும்
மொன்றாமவர் குழியை மூட வேண்டும்

இந்தப் பணியை ஒற்றுமையுடன் நிறைவேற்றினாலே ஒழிய பரி பூரணத்தை காணவியலாது !
எனக்கு என்ன வேலையோ அதை மட்டுமே நான் செய்வேன் என்று ஒருவர் நினைத்தாலும் சிக்கல் எல்லோருக்கும் தான் !

உதாரணமாக :-
கேபிளை பதிப்பவர் வரவில்லை என்பதற்காக குழியை மூடுபவர் தன் எனக்கென்ன என்று குழியை மூடி விடுவராகில் என்ன நடக்கும் ?

ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் மட்டுமே சிறந்த சேவையை முன்னேடுக்க் இயலும் !

நீங்க ரொம்ப குண்டுப் பையனா ?



தேய்ப் பிறையில் மனித மூளை கட்டுக்குள் நிற்காது !
உலகில் நடை பெற்ற அனைத்து பருவ வயது கிரிமினல் நடவடிக்கைகளும் தேய்ப் பிறையில் நடந்துள்ளது.

நாம் உட் கொள்ளும் உணவு நமது எண்ணங்களில் பிரதி பலிக்கும்
உணவு கட்டுப் பாடு நமது எண்ணங்களில் ஏற்படும் எதிர்மறை சிந்தனைகளை சீரமைக்கும் !
இன்றைய மேல் நாட்டு நாகரீகத்தில் ஒபிசிடி என்கிற உடல்பருமன் நோய் மருத்துவ உலகிற்கு மிகப் பெரும் சவால் விடுக்கிறது !

முஹம்மது நபியவர்கள் இந்தப் பிரச்சினைக்கு ஓர் அருமையான தீர்வொன்றை முன் வைக்கிறார்கள் !
ஆம் ! தேய் பிறைகளின் போது நோன்பு வைத்து உணவை கட்டுப் படுத்தும் போது மனமும் தானாகவே கட்டுக்குள் வந்து விடுகிறது என்று கூறுகிறார்கள் !
நாமும் முயன்று பார்க்கலாமே !

பிழைக்க ஆயிரம் வழி!


ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.

அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு.

இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். . அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான்.

அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்? எழுநூறு ரூபாய்க்கு ஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான். சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு.